புதுடில்லி: இந்தாண்டு பிப்., மாதம் ஜிஎஸ்டி ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக கூறியுள்ள மத்திய நிதியமைச்சகம், இது கடந்தாண்டு பிப்., மாதத்தை விட 12 சதவீதம் அதிகம் எனக்கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
2023 பிப்., மாதம் வசூலான ரூ.1,49,577 கோடி ஜிஎஸ்டியில்
சிஜிஎஸ்டி – ரூ.27,662 கோடி
எஸ்ஜிஎஸ்டி – ரூ.34,915 கோடி
ஐஜிஎஸ்டி – ரூ. 75,069 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.35,689 கோடி அடங்கும்)
செஸ் – ரூ.11,931 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.792 கோடி அடங்கும்) ஆகியவை வசூலாகி உள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு செஸ் மூலம் கிடைத்த அதிக வசூலாக பிப்., மாதம் கிடைத்த ரூ.11,931 கோடி உள்ளது.
அதேநேரத்தில் கடந்தாண்டு(2022) பிப்., மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையான ரூ.1.33 லட்சம் கோடியை விட இந்தாண்டு கிடைத்த வருமானம் 12 சதவீதம் அதிகம் ஆகும்.
பொதுவாக, பிப்., மாதம் 28 நாட்கள் வருவதால், ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக தான் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. இதுதான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கிடைத்த இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். முதலிடத்தில் 2022 ஏப்., மாதம் வசூலா ரூ.1.68 லட்சம் கோடி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement