புது கெட்டப்பில் அசத்தும் ராகுல் காந்தி; ஷ்டைலிஷ் படங்கள் செம வைரல்.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, தனது தேசிய ஒற்றுமை பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா) சமீபத்தில் நிறைவு செய்தார். 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் என சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். தெற்கில் கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது, பயணம் வடக்கில் காஷ்மீரில் நிறைவடைந்தது. பாதயாத்திரை நெடுகிலும், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என பரவலான வரவேற்பு ராகுல் காந்திக்கு கிடைத்தது.

பாதயாத்திரையை தொடர்ந்து ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் இருந்த மதிப்பு அதிகரித்தது. பிரதமர் வேட்பாளாராக நிற்க தகுதியை இதன் மூலம் ராகுல் காந்தி ஏற்படுத்தியதாக முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அணியின் சஞ்சய் ராவத் எம்பி தெரிவித்தார். ராகுல் காந்தி பயணத்தை தொடங்கிய நாள் முதல் தனது தாடியை ஷேவ் செய்யாமல் வளர்த்து வந்தார். சுமார் 3 மாத காலம் அவர் தனது தாடியை ஷேவ் செய்யவில்லை.

இந்தநிலையில் லண்டனுக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி தனது தலைமுடி மற்றும் தாடியை ட்ரிம் செய்து புதிய தோற்றத்தில் இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வருங்கால இந்தியாவின் ஸ்டைலிஷ் பிரதமர் என்றெல்லாம் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது விரிவுரைக்கு முன்னதாக, தனது பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி தனது தலைமுடி மற்றும் தாடியை ட்ரிம் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று லண்டனில் ஒரு வார சுற்றுப்பயணத்திற்கு வந்திறங்கினார். அதில் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மத்தியில் விரிவுரை ஆற்ற உள்ளார். கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் (கேம்பிரிட்ஜ் ஜேபிஎஸ்) விசிட்டிங் ஃபெலோவான ராகுல் காந்தி, “21வது நூற்றாண்டை கற்றல்” என்ற தலைப்பில் பேசுகிறார்.

வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் ஸ்டைல் செய்யப்பட்ட தாடியுடன் காங்கிரஸ் எம்பியின் படங்கள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. 52 வயதான அவர் கேம்பிரிட்ஜில், “எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் ஜனநாயகம்” மற்றும் “இந்தியா-சீனா உறவுகள்” பற்றிய அமர்வுகளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ருதி கபிலாவுடன் நடத்த திட்டமிட்டுள்ளார்.

“எங்கள் @CambridgeMBA திட்டம் இந்தியாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் எம்.பி.யுமான ராகுல் காந்தியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது” என்று கேம்பிரிட்ஜ் JBS செவ்வாயன்று ட்வீட் செய்தது.

திருப்பதி லட்டு பிரசாதம்; புதிய மாற்றம் கொண்டு வரும் தேவஸ்தானம்!

அந்த ட்வீட்டைப் பகிர்ந்த ராகுல் காந்தி, “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று @CambridgeJBS இல் விரிவுரை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், பிக் டேட்டா மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு களங்களில் உள்ள சில பிரகாசமான மனதுடன் ஈடுபடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று ட்வீட் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.