முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு Z+ பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு., முழு செலவையும் ஏற்பது யார்?


இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர்நிலை Z+ பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னணி பணக்காரர்

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 9,240 கோடி அமெரிக்க டாலர் ஆகும், மேலும் இந்தியாவில் அதிக வரி கட்டும் நபர் என்றாலும் முகேஷ் அம்பானி தான்.

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு Z+ பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு., முழு செலவையும் ஏற்பது யார்? | Mukesh Ambani Get Highest Level Z Security CoverTwitter 

சமீபத்தில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா ஏற்பாடுகள் இந்திய மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
 

  Z+ பாதுகாப்பு 

இந்நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மிக உயர்ந்த அளவிலான Z+ பாதுகாப்பை வழங்குவதற்கான முழு செலவையும் அம்பானிகள் ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.