சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய உள்ளார்.