மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தொண்டர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! நன்றி கூறும் மக்கள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர், ஆளுநர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே தீவிர மு.க.ஸ்டாலின் தொண்டரான கமலக்கண்ணன் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாற்றுத்திறனாளியான கமலக்கண்ணன் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் இன்று தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு டீ மற்றும் பிஸ்கட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறார். பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று அதனை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். காலை முதலே கூட்டம் அலைமோதி வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வயதானவர்கள் என பலரும் இலவசமாக வழங்கப்படும் ஸ்நாக்ஸ்களை வாங்கி உண்டு மகிழ்ந்து வருகின்றனர். சமோசா, பிஸ்கட்டுகள் வழங்கப்படுகிறது. 

சிறு வயது முதல் திமுக-வில் பற்று கொண்ட மாற்றுத்திறனாளி கமலக்கண்ணன் பேசுகையில், பொதுமக்களுக்கு இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இலவசமாக சமோசா, டீ, பிஸ்கட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு முக கவசத்தையும் அவர் இலவசமாக கொடுத்து வருகிறார். தன்னால் முடிந்த ஒரு சிறு உதவியை அவர் செய்வதாக கூறியுள்ளார். அதோடு இலவசமாக டீ, ஸ்நாக்ஸ் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததோடு, கமலக்கண்ணனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.