திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின்
தனது 70ஆவது பிறந்தநாளை இன்று (மார்ச் 1) கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். “முயற்சி. முயற்சி.. முயற்சி… அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என கலைஞர் நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!”என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தர்ராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். மக்களுக்கு “
தி
“னமும் “
மு
“ழு உடல் நலத்துடன் “
க
“டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பதிவில், “மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.