வேலூர்: வேலூர் ஆற்காடு சாலையில், வேலூர் கோட்ட எல்ஐசி அலுவலகம், மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.33 லட்சம் வரை பாக்கி வைத்திருந்தது. இதனையடுத்து வேலூர் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் இருந்து எல்ஐசி அலுவலகத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆயினும் வரி பாக்கியை செலுத்தவில்லை. இதைதொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரி அந்த எல்ஐசி அலுவலகத்துக்கு நேரில் சென்று சீல் வைக்கப் போவதாக தெரிவித்தார். அப்போது எல்ஐசி அதிகாரிகள் விரைவில் சொத்து வரியை செலுத்தி விடுகிறோம் என வாக்குறுதி அளித்தனர். இதனால் சீல் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது.