`வகுப்புத் தோழன் ஆனந்துக்கு…' இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உடல் நலம், கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்.

இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் பில் கேட்ஸை நேரில் சந்தித்தனர். அந்த வகையில் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ராவும் பில் கேட்ஸை  நேரில் சந்தித்துள்ளார்.

பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி, சக்தி காந்ததாஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மகேந்திரா பில் கேட்ஸ் உடனான தனது சந்திப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “ பில் கேட்ஸை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களது உரையாடலில் தொழில் குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை. மாறாக இருவரும் இணைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்துதான் பேசினோம். பில் கேட்ஸை சந்தித்ததால் அவர் எழுதிய புத்தகம் (The Road Ahead) அவரது ஆட்டோகிராப் உடன் எனக்கு இலவசமாக கிடைத்தது” என்று மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

ஆனந்த்  மஹிந்த்ராவுக்கு பில் கேட்ஸ் பரிசாக அளித்துள்ள அந்த புத்தகத்தில், “எனது வகுப்பு தோழனாகிய ஆனந்திற்கு வாழ்த்துகள்” என்று எழுதி பில் கேட்ஸ்  ஆட்டோகிராப்  போட்டுள்ளார். 

ஆனந்த் மஹிந்த்ரா, பில் கேட்ஸ்

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் வகுப்பு தோழர்களா? என ஆச்சர்யத்துடன் கேள்வியை  எழுப்பி வருகின்றனர். 1970-ல்  அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பில் கேட்ஸும், ஆனந்த் மகிந்த்ராவும் ஒரே வகுப்பில் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.