வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என்ற முன்னிலை பெற்றதுடன், தொடர்ந்து நான்காவது முறையாக ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி வென்ற அணி என சாதனை படைத்தது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று (மார்ச் 1) இந்துாரில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல், முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன் கில், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கேமரன் கிரீன் சேர்க்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement