கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டார் அப்பாச்சி பைக்குகள் தற்போது 160cc முதல் 310cc வரையிலான மாறுபட்ட பிரிவுகளில் 60க்கு மேற்பட்ட நாடுகளில் 50 லட்சத்துக்கு அதிகமான வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2020 அக்டோபரில் 4 மில்லியன் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்த நிலையில் 27 மாதங்களுக்குப் பிறகு உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி
ரோட்ஸ்டர் பிரிவில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர் 180 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் ஃபேரிங் பிரிவில் அப்பாச்சி ஆர்ஆர்310 என மொத்தமாக 5 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த மோட்டார்சைக்கிள்களில் ரேஸ் ட்யூன்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் (RT-Fi), சவாரி முறைகள், டூயல்-சேனல் ஏபிஎஸ், ரேஸ் ட்யூன்டு ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் புளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இந்நிறுவனம் அப்பாச்சி RR 310க்கான BTO (பில்ட்-டு-ஆர்டர்) முறையில் வழங்குகிறது, இதில் வாங்குபவர்கள் மோட்டார் சைக்கிளை தங்களுக்கு உரித்தான தனிப்பயனாக மாற்றிக் கொள்ளலாம்.