சென்னையின் எஃப்.சி. அணி விளையாடிய கால்பந்தாட்ட போட்டி சென்னையில் நடந்தது. அந்த போட்டியை காண தன் செல்ல மகன் ஆத்விக்கை அழைத்து வந்திருந்தார் ஷாலினி.
ஆத்விக்கை சென்னையின் எஃப்.சி. அணி ஜெர்சியில் பார்த்த ரசிகர்களோ, குட்டி தல சென்னை டீமின் ரசிகரா என்றார்கள். தன் அம்மாவுடன் சிரித்த முகமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார் ஆத்விக்.
ஸ்டேடியத்தில் ஷாலினி மற்றும் ஆத்விக்கை பார்த்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வந்து அவர்களுடன் பேசினார். ஷாலினியுடன் பேசிய அபிஷேக் பச்சன் ஆத்விக்கிற்கும் ஒரு ஹலோ சொல்லி அவரின் தலையை தொட்டார்.
ஆத்விக்கோ போட்டியை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார். சென்னையின் எஃப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன் தானாக வந்து ஷாலினியுடன் பேசியதை பார்த்த அஜித் ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
மரியாதை தெரிந்த மனிதர். நம்ம தல நாடு முழுவதும் பிரபலம் என தெரிவித்துள்ளனர் அஜித் ரசிகர்கள். ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக்கும், ஷாலினியும் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள். சென்னையின் எஃப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கூல் கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது. ஆனால் அவரின் குடும்பத்தாரை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது.
ஆத்விக் பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
குட்டி தலயை பார்த்தால் அஜித்தை சிறு வயதில் பார்த்தது போன்றே இருக்கிறது. அஜித்தை உரிச்சு வச்சிருக்கார் என்கிறார்கள்.
அஜித் குமாருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கால்பந்து ஆகும். இந்நிலையில் அப்பா வழியில் மகன் ஆத்விக்கிற்கும் கால்பந்தாட்டம் தான் பிடித்திருக்கிறது போன்று.
ஆத்விக் மட்டும் அல்ல அவரின் அக்கா அனௌஷ்காவும் வேகமாக வளர்ந்து வருகிறார். அம்மாவை விட உயரமாக இருக்கும் அனௌஷ்கா நிச்சயம் நடிகையாக மாட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.
அனௌஷ்காவையும், சூர்யாவின் மகள் தியாவையும் குட்டிப் பாப்பாக்களாக நேற்று பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் இருவருமே நன்றாக வளர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
கெரியரை பொறுத்தவரை மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
AK62 update: ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் தான் இசை: அந்த 2 வாரிசு நடிகர்களும் இல்லையாம்
அஜித் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக அஜித்தின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். விக்னேஷ் சிவன் தொடர்பான அறிவிப்பில் ஏ.கே. 62 என்கிற தலைப்பை பயன்படுத்தியது லைகா.
இதையடுத்து மகிழ்திருமேனி குறித்த அறிவிப்பிலும் ஏ.கே. 62 தலைப்பை பயன்படுத்த விரும்பவில்லையாம். உரிய தலைப்புடன் அறிவிப்பை வெளியிடுவார்களாம். இதற்கிடையே ஏ.கே. 62 படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாமே என லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
AK62:த்ரிஷா, நயன்தாரா வேண்டாம், காந்தக் கண்ணழகியை அஜித் ஜோடியாக்கும் லைகா?
லைகா தயாரித்து வரும் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். முன்னதாக விவேகம் படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.