மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில், அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்று இருந்தது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி சுவாமிநாதன், விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க கோரியும் உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் தடையை நீக்க கோரி முறையிடப்பட்டது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்ட பத்திகளையும் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், அத்வானி, உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளை நீதிபதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டி தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணைக்காக அழைத்து வந்த மனுதாரர் மீது குற்றம் சாட்டுவது எப்படி? என்று நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த கருத்தையும் தான் தெரிவிக்க விரும்பவில்லை என்று நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.