Mayilsamy actor: மறைந்த நடிகர் மயில்சாமியை தான் இந்த கால சிறிய நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர். என இயக்குநர் பி. வாசு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
மயில்சாமிநகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி அன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். சிவபக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்று சிவபாதம் அடைந்துவிட்டார் என்றார்கள் அவரின் ரசிகர்கள். சிவராத்திரி நாள் அன்று இரவு முழுக்க கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் இருந்தார் மயில்சாமி. அதிகாலை வீட்டிற்கு சென்ற நேரத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் மயில்சாமி பற்றி பி. வாசு பேசியிருக்கிறார்.
வாசுபேட்டி ஒன்றில் இயக்குநரும், நடிகருமான பி. வாசு கூறியதாவது, நான் எப்பொழுது வெளியே கிளம்பினாலும் அப்பொழுது எல்லாம் மயில்சாமி என்னிடம் வந்து, எப்போ சார் ப்ரோகிராம் என கேட்பார். எப்போ சார் மறுபடியும் உங்களை பார்க்கலாம் என்பார். என்னை பார்க்கும்போது எல்லாம் இந்த இரண்டு கேள்விகளையும் மறக்காமல் கேட்பார் மயில்சாமி என்றார்.
எம்.ஜி.ஆர்.பி. வாசு மேலும் கூறியதாவது, மயில்சாமி எனக்கு எப்பொழுது போன் செய்தாலும் எடுத்துப் பேசியிருக்கிறேன். ஒரு முறை கூட அவர் போன் போட்டு நான் எடுத்து பேசாமல் இருந்ததே இல்லை. அவர் உதவி என்று கேட்டால் அதில் உண்மை இருக்கும். ஒருவருக்கு சரியான நேரத்தில் தேவைப்படக்கூடிய, பயனுள்ள உதவியாகத் தான் கேட்பார். சினிமா துறையில் இருக்கும் தற்போதைய சிறு நடிகர்களுக்கு எல்லாம் மயில்சாமி தான் என்றைக்கும் எம்.ஜி.ஆர். என்றார்.
சிவ பக்தர்மயில்சாமிக்கு எம்.ஜி.ஆர். என்றால் உயிர். அவர் யாரை சந்தித்தாலும் இரண்டு பேர் பற்றி மட்டும் தான் பேசியிருக்கிறார். ஒன்று எம்.ஜி.ஆர்., மற்றொன்று சிவ பெருமான். தீவிர சிவ பக்தரான மயில்சாமி தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லுமாறு கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார். திருவமண்ணாமலை கோவிலில் தான் டிரம்ஸ் வாசிக்க மயில்சாமி தான் காரணம் என சிவமணி தெரிவித்தார்.
சிவமணிசிவராத்திரி நாள் அன்று இரவு 3 மணி வரை மயில்சாமி தன்னுடன் தான் இருந்தார் என்றார் சிவமணி. சில மணிநேரத்தில் அவரிடம் இருந்து போன் வந்தது. எடுத்துப் பேசினால் மயில்சாமியின் மகன் அழுகிறார். அப்பா இறந்துவிட்டார் என்றார். அவர் கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார். கோவிலில் சிவமணி டிரம்ஸ் வாசித்ததை மயில்சாமி ரசித்து கேட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
கடைசி ஆசைகேளம்பாக்கம் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். அதை தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தன் கடைசி ஆசையை சிவமணியிடம் கூறியிருக்கிறார் மயில்சாமி. இது குறித்து அறிந்த ரஜினியோ, மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
Rajinikanth, Mayilsamy:மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: ரஜினி வாக்குறுதி