Old Pension Scheme: அரசு நடவடிக்கை எடுக்குமா? சமீபத்திய அப்டேட் என்ன?

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து சமீபத்திய நாட்களில் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி, தேசிய ஓய்வூதிய முறையை அதாவது என்.பி.எஸ்-ஐ நிறுத்தி விட்டன. அதே சமயம், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்ற கேள்விக்குறிகள் இன்னும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? அதில் உள்ள நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத் தொகை முழுவதும் அரசு மூலம் வழங்கப்படுகிறது. ஊழியர் பணியில் இருக்கும் வரை அந்த காலக்கட்டத்தில் பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியத் தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை. 2004 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூலம் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டாலும், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது.

பழைய ஓய்வூதியத் திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆண்டுக்கு இருமுறை அகவிலை நிவாரணத் தொகை (டிஆர்) திருத்தம் செய்யப்படுவதன் பலனைப் பெறுவது வழக்கம். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் சுமார் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

ஓய்வூதியம்

தற்போதுள்ள விதிகளின் கீழ், அரசு ஊழியர்கள் மட்டுமே ஓய்வு பெற்ற பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். ஓபிஎஸ்-ன் கீழ் பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜிபிஎஃப்) வசதி இருந்தது. ஜிபிஎஃப் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மட்டுமே கிடைக்கும். அடிப்படையில் இது அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஜிபிஎஃப்-க்கு பங்களிக்க அனுமதிக்கிறது.

இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் மத்திய அரசு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய ஓய்வூதிய முறையில் பல சலுகைகளை வழங்க மோடி அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வூதிய முறையை சீர்திருத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.