அமராவதி :ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில், ௩,௦௦௦ கோவில்களை ஆந்திர அரசு கட்டி வருகிறது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத் துணை முதல்வரும், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா நேற்று கூறியதாவது:
முதல்வரின் உத்தரவின்படி, ஹிந்து மதத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், ஹிந்து மத நம்பிக்கைகளை பரப்பும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது.
கோவில்கள் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி அறக்கட்டளை, கோவில் ஒன்றுக்கு, ௧௦ லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறது. இதைத் தவிர, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கோவில்கள் கட்டும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, ௧,௩௩௦ கோவில்கள் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. புதிதாக, ௧,௪௬௫ கோவில்கள் கட்டப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகளை ஏற்று, ௨௦௦க்கும் மேற்பட்ட கோவில்கள் என, மொத்தம், ௩,௦௦௦ புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement