இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரீனா விளையாட்டு மைதானத்தில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் வெளியிட்டார். 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கில் முன்னிலை பெற்று வருவது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார்.

அதிமுகவின் பின்னடைவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒருவரின் வெற்றியை தான் நான் பார்க்கிறேன். மற்றவர்களின் தோல்வி குறித்து பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.

கடந்த ஜன. 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்தார். இதனையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்க்யு பிப். 27 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது அதன் பிறகு 238 வாக்கு சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களுடைய வாக்கு வாக்குகள் எண்ணப்பட்டது.  

ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வந்தார். ஏறக்குறைய திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அனைத்து சுற்றுகளும் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் குறித்து அறிவிப்பை வெளியிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.