இந்தியாவில் இதுவரை பதிவான வெப்ப நிலைகளில் கடந்த பெப்ரவரி மாதம் பதிவான வெப்ப நிலையே மிகவும் அதிகம் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக அமைந்துள்ளது. இதுவே இதுவரை பெப்ரவரி மாத வெப்பநிலையில் அதிகபட்சமாகும்.
1901 ஆம் ஆண்டுக்;குப் பிறகு 2006 பெப்ரவரியில் 29.31°C 2016
பெப்ரவரி யில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.