இலங்கையிலிருந்து லாவோஸிற்கு ஆட்கடத்தல் முறைப்பாடுகள் குறித்து வெளியான தகவல்


இலங்கையிலிருந்து லாவோஸிற்கு (Laos) ஆட் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நேற்றைய தினம் வரை (01.03.2023) 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகப் பொய்யான உத்தரவாதத்தின் பேரில், இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இலங்கையிலிருந்து லாவோஸிற்கு ஆட்கடத்தல் முறைப்பாடுகள் குறித்து வெளியான தகவல் | Complaints Of Human Trafficking

முறைப்பாடுகள்

ஏற்கனவே பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ருவன் பத்திரன மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உள்ளூராட்சி வேட்பாளர் அனுர சேனாரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தென் மாகாணத்தில் உள்ள இளைஞர்களால் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சிலரைத் தவிர, எஞ்சிய இலங்கையர்கள் இன்னும் லாவோஸில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் இதற்கு முன்னர் நான்கு இளம் பெண்களையும் ஒரு இளைஞனையும் முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் லாவோஸுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்காக அவர்கள், சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து தலா 5,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளனர்.

எனினும் இந்த இளைஞர்களின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.