ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு குறிப்பிட்ட வார்டுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன. ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் மட்டும் அந்தந்த அமைச்சர்கள் பணியாற்றினால் போதும் என்ற நிலை இருந்தது.

அந்த வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த அன்னை சத்யா நகர், சூரியம்பாளையத்தை உள்ளடக்கிய 20,21 22,23 வது வார்டுகள் ஒதுக்கப்பட்டன. அவரும் முழுமையாக அங்கேயே முகாமிட்டு தீவிர களப்பணியாற்றினார். திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாக களமிறக்கி காலை மாலை என நாளொன்றுக்கு இரண்டு முறை வீடு வீடாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அதன் முடிவு நல்ல முறையில் வந்திருப்பதால் அன்பில் மகேஷ் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், முதலமைச்சரின் சாதனைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது என்றும் 20 மாதங்களில் கொண்டு வந்த சாதனை திட்டங்களும், இன்னும் 20 ஆண்டுகள் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றார்.  இது ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் எண்ணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.