உணவுப்பொருட்கள் விலை தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை


பிரான்சில், இந்த மாதம் முதல் பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என துறைசார் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரான்சில் பிப்ரவரியில் நுகர்வோர் விலைகள் 6.2 சதவிகிதம் உயர்ந்தன.

இந்நிலையில், இம்மாதம் முதல், உணவுப்பொருட்கள் விலை 10 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என தேசிய பல்பொருள் அங்காடிகள் அமைப்பு ஒன்றின் தலைவரான Jacques Creyssel என்பவர் எச்சரித்துள்ளார்.

எதனால் இந்த விலை உயர்வு?

பொருட்களை பார்சல் செய்வதற்கு ஆகும் செலவு, ஆற்றல், எரிபொருள் மற்றும் கச்சாப்பொருட்கள் விலை உயர்வே இந்த பல்பொருள் அங்காடிகள் உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணமாக கருதப்படுகிறது.

பல்பொருள் அங்காடிகளுக்கு பொருட்கள் விநியோகிப்போருடனான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும், கோடை வரை இந்த விலை உயர்வுகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள Mr Creyssel, விலை உயர்வுகள் 10 சதவிகிதம் வரை எட்டும் என்றும், குறிப்பாக, உணவுப்பொருட்கள், சில அழகுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் சோப் முதலான அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் விலைகள் உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

உணவுப்பொருட்கள் விலை தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை | Food Prices To Rise By 10 Warns Industry Chief

period Pic: Stokkete / Shutterstock



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.