'உலக கடற்புல் தினத்தை' கொண்டாடும் வகையில் நினைவு முத்திரை

நேற்று இடம்பெற்ற (2023 மார்ச் 1 ஆம் திகதி) ‘உலக கடற்புல் தினத்தை’ கொண்டாடும் வகையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நினைவு முத்திரை மற்றும் கடித உறையும் வெளியிடப்பட்டன.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உட்பட இராஜதந்திர பிரதிநிதிகள், சுற்றாடல் அமைச்சின் செயலாளர், தபால் திணைக்கள அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றாடல் ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.