மதுரை: தமிழ்நாட்டில் அரசின் ஆணைப்படி தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தியுள்ளது. முதல் முறை ஒரு தொகையும், மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-22 வரை 6,074 கடைகளில் 4.58 லட்சமும், 349 உணவகங்களிடம் இருந்து 32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.