சாலைப் பணிகளுக்கு அனுமதி: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்ட முக்கியத் தீர்மானங்கள்

சென்னை: மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சென்னையில் உள்ள சாலைகளை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று (மார்ச் 2) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் துருக்கி நிலநடுக்கத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியத் தீர்மானங்களின் விவரம்:

> 844 நவீன பேருந்து நிழற்குடைகளை நான்கு ஆண்டுகளுக்கு பொதுமக்கள் தனியார் பங்கிளிப்பு ( Public Private Partnership) முறையில் புதுப்பித்து, பராமரித்தல்.

> புவிசார் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்த கட்டிடங்களில் உபயோகத் தன்மை மாறுபாடு உள்ள கட்டிடங்களை அளவீடு செய்து பணியை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்குதல்.

> தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் கீழ் 2,3,4,6,10,12,13,14,15 ஆகிய மண்டலங்களில் உள்ள 370 உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 17 ஆணை வழங்குதல்.

> தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 300 உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஆணை வழங்குதல்.

> சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 1,2,3,5,11,13 மற்றும் 14 மண்டலங்களில் உள்ள உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஆணை வழங்குதல்.

> 3,4,6,8,9,10,13 மற்றும் 15 ஆகிய மண்டலங்களில் உள்ள பேருந்து தடை சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஆணை வழங்குதல்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.