தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா, திமுக பிரமுகர் யுவராஜ் நலத்திட்டம்

கடலூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட திமுக பிரமுகர் பண்ருட்டி தொழிலதிபர் யுவராஜ் சார்பில் கடலூர் முதுநகர் இக்னைட் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திமுக பிரமுகர் தொழிலதிபர் யுவராஜ் சார்பில் முதியோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி சிறக்கவும், உடல் நலத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடலூர் திமுக பிரமுகர் அமீர் அப்பாஸ் மேற்கொண்டார். கடலூர் துறைமுகம் பகுதி திமுக செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, வார்டு செயலாளர் சத்தியமூர்த்தி, பிரதிநிதி ராமமூர்த்தி, ஷீலா, தர், பிரபாகரன், இக்னைட் டிரஸ்ட் முதியோர் காப்பக நிர்வாகிகள் ஜோஸ் மகேஷ், சுந்தரவடிவேல், அரசி, கலையரசி, சுப்பிரமணியன், புண்ணியகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.