திண்டுக்கல்லில் பரபரப்பு… அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். 

அதில், வாகனத்தை ஓட்டிவந்த நபருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும், வாகனப்பதிவு புத்தகம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் பெயர் அராபத் என்றும், தந்தை பெயர் சாதிக் என்றும் தெரியவந்தது.

அதன் பின்னர் போலீசார் அந்த வாலிபரின் வாகனத்திற்கு அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் அவரிடம் கொடுத்தனர். அந்த ரசீதை வாங்கிச் சென்ற அராபத் சிறிதுநேரத்தில், மேலும் இருவரை அழைத்துக்கொண்டு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை தேடி வந்துள்ளார். 

அப்போது அந்த போலீசார் அருகில் இருந்த ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து சர சரவென்று ஓட்டலுக்குள் சென்று போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து அவரைத் தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த வாலிபர்கள் வெளியே வந்தால் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து வெளியே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த  காவலர்களின் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து வந்த பழனி நகர போலீசார், சேதமடைந்த இருசக்கர வாகனங்களை மீட்டு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.