திண்டுக்கல்: இடத்தகராறு; இருவரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! – நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் தனபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியிலுள்ள அகஸ்தியர்புர​த்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி வாழை, எலுமிச்சை விவசாயம் செய்து வ​ந்திருக்கிறார். தொடர்ந்து அவரால் விவசாயம் செய்ய முடியாத நிலையில், தனது விவசாய நிலத்தில் நிலத்தை அய்யம்பாளையம் அருகேயுள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார்.

காயமடைந்தவர்

​தனபால் விற்பனைசெய்த ஐந்து ஏக்கர் நில​த்தை அளவீடு செய்து பார்த்தபோது, இடத்தின் அளவு குறைவாக இருந்திருக்கிறது. இது குறித்து கருப்பையா​, ​ராஜாக்கண்ணு ​என்பவருடன் சேர்ந்து தனபாலிடம் குறைவாக இருக்கும் இடத்துக்கு ப​​ண​ம் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்​றியதில், தனபால் தான்​ மறைத்து வைத்திருந்த​ ​டபுள் பேரல் துப்பாக்கியால் கருப்பையாவை வயிறு, தொடை பகுதிகளில் சுட்டிருக்கிறார்.

​கருப்பையாவைக் காப்பாற்ற முயன்ற ராஜாக்கண்ணுவையும் தனபால்​ துப்பாக்கி​யால்​ சுட்டிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையா, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த ​ராஜாக்கண்ணுவுக்கு சிறுமலை பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.​ ​

சிறுமலை

தகவலறிந்த ​போலீ​ஸா​ர் ​நிகழ்விடத்துக்குச் சென்றபோது தனபால் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீ​ஸா​ர் வழக்கு ​பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ​சுற்றுலாத் தலமான சிறுமலையில் நடந்த இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.