புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் கமிஷனர்கள் நியமிக்க கொலீஜியம் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த 3 பேரின் பரிந்துரையை ஏற்று, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக பார்லிமென்ட் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடர வேண்டும். லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத பட்சத்தில், அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி அஜய் ரோஸ்தகி பிறப்பித்த உத்தரவில், தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறையே, மற்ற தேர்தல் கமிஷனர்களை நீக்குவதற்கும் பின்பற்றப்படும் எனக்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement