Erode East Bypoll Result: திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவது உறுததியாகியுள்ளதை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக,காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார் இதனையடுத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றர்.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் பாஸ்கர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு பகுதியிலுள்ள கலைஞர் பவள விழா மாளிகை முன்பு பாட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கும்,தொண்டர்க்ளுக்கும் இனிப்புகளை வழங்கியும், கோஷங்களை எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்று, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு,நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா , தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் கடந்த 27ந் தேதியன்று வாக்கு பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியதில் இருந்து தி.மு.க.கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளோங்கவன் அ.தி.மு.க.வேட்பாளரை தென்னரசுவை விட சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னனியில் உள்ளார்