“ரஷ்யா – உக்ரைன் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்”-பிரதமர் மோடி

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கமுடியும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடி ஆகியோர் இருதரப்பு ஆலோசனைக்கு பின், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உற்பத்தி உட்பட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மெலோனி, ஜி 20 தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கிய பங்காற்றும் என நம்புவதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.