3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி…

இந்திய அணி 88 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் நெருக்கடியான நிலையில் தனது இரண்டாம் இன்னிங்சில் தற்போது விளையாடி வருகிறது.

இந்தியாவின் இந்தூரில் நேற்று (01) ஆரம்பமான இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் தொடரில் நாணய சுழற்நியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் இந்திய அணி 33.2 ஓவரில் 109 ஓட்டங்கள மட்டுமே எடுத்திருந்த நிலையில் சகல விட்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து அவுஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் பிடி கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 31 ஓட்டங்களிலும் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களிலும் அவுட்டாகினர். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்து ,47 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ஓட்டங்களுடனும் கேமரூன் கிரீன் 6 ஓட்டங்களுடனும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி உமேஷ் யாதவின் வேகத்திலும், அஸ்வின் சுழலிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 60 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி இன்று (02) மாலை 7 விக்கட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை எடுத்திருந்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.