சிலம்பரசன்
தேடலில் ரஜினி எப்படி இருந்த சூப்பர்ஸ்டார் இப்படி ஆகிட்டார் என்பது தான் பலரது கருத்தாகவும் இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் ரஜினியின் படம் வெளியானால் வெற்றிதான் என இருந்தது. படத்திற்கு படம் வெற்றிகளை வாரி குவித்து புது புது வசூல் சாதனைகள் செய்து இந்திய சினிமாவை வியக்க வைத்தார் சூப்பர்ஸ்டார். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ரஜினி ஒரு வெற்றிப்படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. ரஜினியும் பல விஷயங்களை முயற்சித்து பார்த்துவிட்டார். லிங்கா என்ற கமர்ஷியல் படத்தில் துவங்கி கோச்சடையான் என்ற 3D படம் வரை ரஜினியின் பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இருந்தாலும் தொடர்ந்து தன் முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றார் ரஜினி
ரஜினியை சூழ்ந்த இயக்குனர்கள் ஒரு காலகட்டத்தில் ரஜினி பெரிய இயக்குனர்களுக்கும் மூத்த இயக்குனர்களுக்கும் தான் வாய்ப்பளித்து வந்தார். அதன் பிறகு மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித்திற்கு கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார் ரஜினி. இதையடுத்து தான் ரஜினிக்காக பல இளம் இயக்குனர்கள் கதைகளை தயார் செய்ய ஆரம்பித்தனர். ரஞ்சித் போன்ற இளம் இயக்குனருக்கு ரஜினி வாய்ப்பளித்தது அன்று திரைதுறையால் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்தார் ரஜினி. இருப்பினும் அவர் எதிர்பார்த்த அந்த வெற்றி மட்டும் கிடைக்கவில்லை. தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி தன் அடுத்த படத்தை இயக்க தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி இளம் இயக்குனர்களிடமும் கதை கேட்டு வந்தார். இறுதியில் ஜெய் பீம் புகழ் ஞானவேலை தன் 171 ஆவது திரைப்படத்தின் இயக்குனராக உறுதிப்படுத்தினார் ரஜினி
கழட்டி விட்ட ரஜினி ஜெயிலர் படத்தை அடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கின்றார் ரஜினி. இதையடுத்து தன் 171 படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி தேசிங்கு பெரியசாமியிடமும் கதை கேட்டார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். இதையடுத்து படத்தை பார்த்துவிட்டு தேசிங்கு பெரியசாமியை பாராட்டிய ரஜினி தனக்கு எதாவது கதை இருந்தா சொல்லுங்க என கூறியிருக்கின்றார். ரஜினியே கதை கேட்டுட்டாரே என்ற குஷியில் இஷ்டப்பட்டு ரசிச்சு ரசிச்சு ஒரு கதையை ரஜினிக்காகவே உருவாக்கினார் தேசிங்கு பெரியசாமி. கதையை கேட்டுவிட்டு ரஜினிக்கு பிடித்திருந்தாலும் இதனை தேசிங்கு பெரியசாமி எடுத்துவிடுவாரா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. ஒரு படம் மட்டுமே தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்ததால் அனுபவத்தை கருத்தில் கொண்டு அவரை கழட்டிவிட்டார் ரஜினி
வாய்பிளிக்கும் சிம்பு சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக தான் தயார் செய்த கதையை ரஜினி நிராகரித்துவிட்டாரே என்று வருத்தத்தில் இருந்த தேசிங்கு பெரியசாமிக்கு தற்போது சிம்பு வாய்பளித்துள்ளார். தேசிங்கு பெரியசாமி ரஜினிக்காக உருவாக்கிய கதையில் சிம்புவிற்காக சில மாற்றங்களை செய்து அவரிடம் கூறியுள்ளார். கதையை கேட்ட சிம்பு உடனடியாக இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அநேகமாக பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு தேசிங்கு படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி உருவாக்கிய கதை மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது என்பதாலும், தமிழ் சினிமாவில் இதுபோல ஒரு கதை வந்ததில்லை என்பதாலும் சிம்பு இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. ஒருவேளை படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றால் ரஜினி தேசிங்கின் முதல் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதை போல மீண்டும் போன் செய்து பாராட்டுவாரா என்பது சந்தேகமே