ரஜினியின் 170 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ‘ஜெய் பீம்’ இயக்குனருடன் ரஜினி கூட்டணி அமைப்பதாக வெளியான தகவல் இன்று உறுதியாகியுள்ளது. சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தில் பல சர்ச்சை, எதிர்ப்புகளை தாண்டி அழுத்தமான அரசியல் பேசிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளது கோலிவுட் வட்டாரத்தினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
‘அண்ணாத்த’ படத்தினை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க கமிட் ஆனார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன் காம்போ இணைந்துள்ளது. மேலும் நடிகை தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனத்தால் ஜெயிலரை உறுதியாக பந்தயம் அடிக்க செய்துவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். அதற்குகேற்றவாறு ஒரு வலுவான கூட்டணியை இந்தப்படத்தில் களமிறக்கியுள்ளார் நெல்சன். பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கன்னட பிரபலம் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் ஜெயிலரில் நடித்து வருகின்றனர்.
இதனிடையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கிறார் ரஜினி. ‘லால் சலாம்’ என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்
இசையமைக்கிறார்.
Kavin:தனுஷை தொடர்ந்து கார்த்தி செய்த காரியம்: சந்தோஷத்தில் திக்குமுக்காடும் கவின்.!
இந்நிலையில் ‘லால் சலாம்’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின் படி பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவியும், நடிகையுமான ஜீவிதா இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1990 ஆம் ஆண்டிலிருந்து நடிப்பதற்கு இடைவெளி விட்டு அரசியலில் கவனம் செலுத்தி வந்த ஜீவிதா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் தடம் பதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Vadivelu: வடிவேலுவுக்கே விபூதி அடித்த கும்பல்: பகீர் கிளப்பிய சம்பவம்.!
மேலும் ‘லால் சலாம்’ படத்தில் ஜீவிதா ராஜசேகர் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நெல்சனின் முந்தைய படங்களை விட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.