Twitter தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் Elon Musk? புதிய தலைவர் யார்?

சமீபத்திய சந்திப்புகளில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கக்கூடிய எலன் மஸ்க் தான் விரைவில் ட்விட்டர் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முடிவதற்குள் புதிய ட்விட்டர் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இந்த புதிய தலைவர் பொறுப்பிற்கு எலன் மஸ்க் நடத்திவரும் The Boring Company தலைவர் ஸ்டீவ் டேவிஸ் தேர்வு ஆக அதிக வாய்ப்பு உள்ளது. எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்க உதவிவரும் ஸ்டீவ் டேவிஸ் அடுத்த தலைவராக வருவார் என்று தெரிகிறது.

யார் இந்த Steve Davis?

இவர் The Boring Company நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்கும் முன்னதாக எலன் மஸ்கின் SpaceX நிறுவனத்தின் பணிபுரிந்துள்ளார். இவர்கள் இருவரும் 2003 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வேலை செய்துவருகிறார்கள்.

இந்த ட்விட்டர் தலைவர் பொறுப்பை எலன் மஸ்க் துறந்து வெறும் ‘Software Server teams’ மட்டும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளார். இவரை இந்த பதவிக்கு எலன் மஸ்க் தேர்வு செய்ய முக்கிய காரணம் எலன் மஸ்க் அவரை 500 மில்லியன் டாலர் செலவை குறைக்க சொல்லி இருந்த நிலையில் ஸ்டீவ் டேவிஸ் சுமார் 1 பில்லியன் டாலர் செலவை குறைத்துள்ளார்.

எலன் மஸ்க் பதவியை துறந்தாலும் பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் குழுவின் கட்டுப்பாட்டை அவரிடமே வைத்திருப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே இதுபற்றி எலன் மஸ்க் ட்வீட் செய்துவிட்டார். அந்த டீவீட்டில் “தகுதியான ஒருவரை கண்டதும் பதவியை துறந்து மென்பொருள் மற்றும் சேவை குழுவை மட்டும் நடத்துவேன்” என்று ட்வீட் செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.