Vadivelu: வடிவேலுவுக்கே விபூதி அடித்த கும்பல்: பகீர் கிளப்பிய சம்பவம்.!

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒலிக்கும் ஒரு குரல் என வடிவேலுவின் குரலை சொல்லலாம். அந்தளவிற்கு தினந்தோறும் தொலைக்காட்டியில் இவரது நகைச்சுவை காட்சிகள் ஒளிப்பரப்பாகாத வீடுகளே இல்லை எனலாம். பலருக்கு கஷ்டங்களை மறக்கடிக்க செய்பவராகவும், மீம்ஸ் கிரியேட்டர்களின் மன்னராகவும் திகழ்கிறார் வடிவேலு.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் முடிசூடா மன்னனாகவே வலம் வருகிறார் வடிவேலு. கொஞ்ச காலமாகவே இவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும், ரசிகர்கள் இவரை மிஸ் செய்யவே இல்லை. அந்தளவிற்கு மீம்ஸ் மூலமாகவோ, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை காட்சிக்களாலோ ரசிகர்களுடன் டச்சிலே இருந்தார் வடிவேலு.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த சில வருடங்களாக இவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து அதிரடியாக தனது ரீ எண்டரியை துவங்கினார் வடிவேலு. இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத்துவங்கியது.

ரீ எண்டரியில் கலக்கும் வடிவேலு

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம்கடந்த வருடம் வெளியானது. சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது பி. வாசு இயக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

Kavin:தனுஷை தொடர்ந்து கார்த்தி செய்த காரியம்: சந்தோஷத்தில் திக்குமுக்காடும் கவின்.!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் வடிவேலுக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து வடிவேலு டாக்டர் பட்டத்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Aranmanai 4: விஜய் சேதுபதிக்கு டாட்டா: இரண்டு கதாநாயகிகளை வைத்து சுந்தர் சி போடும் பலே திட்டம்.!

இந்நிலையில் இந்த டாக்டர் பட்டம் போலியானது என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பகீரை கிளப்பியுள்ளது. இந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழா அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இதில் வடிவேலுக்கு மட்டுமின்றி இசையமைப்பாளர் தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி உட்பட ஏராளமான பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நான் பாட்டுக்கு சிவனேனு தான்டா இருந்தேன்

இந்நிலையில் இந்த டாக்டர் பட்டம் போலியானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பே இல்லை என்ற செய்தியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைகழகத்தை ஏமாற்றியுள்ள கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து வடிவேலு மீம்ஸ்களை வைத்தே இந்த சம்பவத்தை கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.