சென்னை: அதிக லாபம் என ஆசை காட்டும் இணையதள மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இணையதள வாயிலாக ஒரு மோசடி கும்பல் பலரை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைத்தளங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் காணொளி காட்சி ஒன்றினை பதிவிட்டுள்ளார். வேலை தேடுபவர்களையும், தொழில் தொடங்க எண்ணுபவர்களையும் குறி வைத்து இணையதள வாயிலாக […]