கோவை: கோவையில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகள் தலா ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சிங்காநல்லூர், பீளமேடு சாலையில் உள்ள லெவல் கிராசிங்கை மாற்றி, ரயில்வே மேம்பாலம் அமைப்பதை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜி.ஆர்.ஜி. பள்ளி தரப்பில் பூங்கோதை, ஸ்ரீ மீனாட்சி அண்ட் கோ தரப்பில் மணி, விஜயகுமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.