திருமலையில் தங்கும் பக்தர்களிடம் அறைகளை காலி செய்யும்போது பணம் கேட்டால் விஜிலென்ஸில் புகார் அளிக்கலாம்

*டயல் யுவர் நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தகவல்

திருமலை : திருமலையில் பக்தர்களிடம் அறைகளை காலி செய்யும் போது பணம் கேட்டால் விஜிலென்ஸில் புகார் அளிக்கலாம் என டயல் யுவர் நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமையா  பவனில் டயல் யுவர் நிகழ்ச்சி செயல் அதிகாரி தர்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செயல் அதிகாரி  பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

சேலத்தை சேர்ந்த பக்தர்:   முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய அறைகள் ஒதுக்கீடு, இலவசமாக தரிசனத்தில் ₹50 லட்டு டோக்கன்கள் வழங்கிடத்தில் வைத்தது மிகவும் நல்லது.  நந்தகம், ராம்பாகிச்சா எதிரே உள்ள கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். செயல் அதிகாரி:  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்:  வெங்கட ராமகிருஷ்ணா  ஆன்லைன் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் ஒரே நேரத்தில் மூன்று மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மாதம் ஒருமுறை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

செயல் அதிகாரி: கொரோனாவுக்கு முன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளை ஆன்லைனில் வெளியிட்டது.  கொரோனா காரணமாக, சூழ்நிலையைப் பொறுத்து மாதம் ஒருமுறை வெளியிடுகிறோம்.  கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டுள்ளது. கம்மம் சேர்ந்த பக்தர்: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக தரை தளத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். செயல் அதிகாரி:  அறைகள் கிடைப்பதை பொறுத்து, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தரை தளத்தில் அறைகள் ஒதுக்கி தரப்படும்.

 புட்டபர்த்தி சேர்ந்த பக்தர்: நான்கு மாட வீதிகளில் கடும் வெயிலால் பக்தர்களின் பாதங்கள் சுடுகிறது. இதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
செயல் அதிகாரி:  மாட வீதிகளில் கால்கள் சுடாமல் இருக்க வெள்ளை பெயின்ட் மற்றும் கம்பளம் அமைக்கப்படும். ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்:  திருமலையிலும் அங்கப்பிரதட்சண டோக்கன்களை நேரடியாக வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

செயல் அதிகாரி:  திருமலையில் நேரடியாக வழங்குவதால் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளின்படி ஆன்லைனில் வெளியிடுகிறோம்.கடப்பா, துவ்வாடாவை சேர்ந்த பக்தர்கள்:  மார்ச் மாதத்தில் அறை முன்பதிவுக்கான யு.பி.ஐ கட்டணம் செலுத்தினோம்.  ஆனால் ரசீது வரவில்லை.  அறைகளை காலி செய்யும் போது பணம் கேட்கின்றனர். செயல் அதிகாரி: மென்பொருளில் சிக்கல் உள்ளது.  அறைகளை காலி செய்யும் போது, ஊழியர்கள் கேட்டால்  பணம் கொடுக்க வேண்டாம்  விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்.

 மஹபூப்நகரை சேர்ந்த பக்தர்:

 திருமலையில் ஜல பிரசாதம் தண்ணீர் சரியாக இல்லை.  பிளாஸ்டிக் பாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.  பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.செயல் அதிகாரி:  ஜலபிரசாத மையங்களில் தினமும்  தண்ணீரை பரிசோதிக்கப்படுகிறது. அணையில் உள்ள தண்ணீரை சோதனை செய்த பிறகே சப்ளை செய்கிறோம்.  அறை ஒதுக்கீட்டு மையங்களில் பக்தர்களுக்கு குறைந்த விலையில் டப்பர்வேர், செம்பு பாட்டில்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 புலிவெந்துலாவை சேர்ந்த பக்தர்:   மூன்று மாதங்களாகியும் அறைகளுக்கான முன் வைப்புத்தொகை திரும்ப வரவில்லை. செயல் அதிகாரி:  கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியிருந்தால், மூன்று நாட்களுக்குள் அதே கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இந்துபுரத்தை சேர்ந்த பக்தர்:  மலைப்பாதையில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட திவ்யதரிசன டோக்கன்களை வழங்கவும்.செயல் அதிகாரி:  திவ்யதரிசன டோக்கன்கள் வழங்குவது குறித்து கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு  அறிக்கை வந்தபின் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.