அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் மதுபோதையில், தூக்கத்திலிருக்கும் போது சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்தைத் தெரிவிக்காததால் ஏர் இந்தியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்-நியூ டெல்லி
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:16 மணிக்கு, நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு 14 மணி நேரம் 26 நிமிடங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10:12 மணிக்குத் தரையிறங்கிய எண் AA292 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
@istock
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் நன்கு குடித்துவிட்டு போதையில் தூங்கியுள்ளார். அவரை அறியாமலே தூக்கத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
அந்த சிறுநீர் கசிந்து அருகில் அமர்ந்துள்ள இன்னொரு நபர் மீது பட்டிருக்கிறது. இதனை அங்கு பணிபுரியும் பணிப் பெண்களிடம் புகாராகக் கூறியுள்ளார். குறித்த மாணவர் இதனைப் பெரிது படுத்த வேண்டாம், பெரிது படுத்தினால் தேவையில்லாமல் என் மானம் போகும் எனக் கூறியிருக்கிறார்.
குற்றவியல் நடவடிக்கை
விமான நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, ஐஜிஐ விமான நிலையத்தில் உள்ள ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டுக்கு (ஏடிசி) புகார் அளித்தது. நடந்த சம்பவம் குறித்து பணியாளர்கள் அறிந்ததும், அவர்கள் ஏடிசிக்கு விடயத்தைத் தெரிவித்த விமானிக்குத் தகவல் கொடுத்தனர்.
விமான நிலையத்திற்கு வந்த CISF குற்றம் சாட்டப்பட்ட பயணியை டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தது. சிவில் விமான போக்குவரத்து விதிகளின்படி, ஒரு பயணி கட்டுக்கடங்காத நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குற்றத்தின் அளவைப் பொறுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு அவர் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும்.