கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மேல்அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவரது விவசாய நிலத்தில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், அதனை தடுப்பதற்காக நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் அறுவடை வேலைக்காக மணம்தவழ்ந்த புத்தூர் காலனி பகுதியை சேர்ந்த தனலட்சுமி (65) என்பவர் சுப்புராயன் விவசாய நிலம் வழியாக சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியை தனலட்சுமி மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி சுப்புராயனை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.