சென்னை: சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 297 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இதற்காக தலா ஐந்து பணியாளர்கள் கொண்ட 16 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெரு நாய்கள் தொல்லை குறித்து 1913 என்ற எண்ணில் புகாரளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.