வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், இந்தியாவிற்கு எதிராக பிரசாரம் செய்யும் வகையில் சில மேற்கத்திய அமைப்புகள் போஸ்டர்கள் ஒட்டியதை, இந்தியா மாணவி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
ஜெனிவா நகரில், ஐநா., கட்டடம், ஐநா., மனித உரிமைகள் கமிஷன் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஒன்றில் இந்தியாவில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்ற வாசகத்துடன், பெண்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு போஸ்டரில், குழந்தை திருமணங்கள் நடக்கிறது எனக்கூறியுள்ளதுடன், இந்தியாவில் குழந்தைகள் உரிமைகளில் அதிகளவு விதிமீறல் நடக்கின்றன எனக்கூறப்பட்டுள்ளது.
மற்றொன்றில், இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல், மேலும், இந்தியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்து வரும் பலரும், ஐநா., மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள பகுதிகளில், இந்தியாவிற்கு எதிராக பொய் பிரசாரம் செய்யப்படுவதை , இந்திய மாணவி ஒருவர் படம்பிடித்துள்ளார். இது தான், 2024 தேர்தலுக்காக செய்யப்படும் முன்னேற்பாடா அல்லது இந்தியாவிற்கு எதிரான ‘டூல் கிட்டா’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவிற்கு எதிராக பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியது ஏன் என ஐ.நா., அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பலர், இந்தியா வளர்ந்து வருவது , மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சில அமைப்புகளுக்கு பிடிக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். பொய்யான மற்றும் உண்மைக்கு புறம்பான இந்த போஸ்டர்களை உடனடியாக அகற்ற அணுகும்படி வெளியுறவு அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement