சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 5, 6 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களிலும், 7, 8-ம் தேதிகளில் தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. சமவெளிப் பகுதியில் மிக குறைந்த அளவாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 12.5டிகிரி, மலைப் பிரதேசமான வால்பாறையில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.