வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு, மம்தா, பரூக் அப்துல்லா, சந்திர சேகர ராவ், கெஜ்ரிவால் உள்ளிட்ட 9 எதிர்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மணீஷ் சிசோடியா ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் டில்லி பள்ளி கல்வியை உருமாற்றியதற்காக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவர்.
ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதியான ஒன்றாக உள்ளது. உங்களுடன் முரண்பட்ட கொள்கையை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். நாம் ஜனநாயக நாடு என்பதில் இருந்து சர்வாதிகார போக்கிற்கு மாறி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement