மருமகளை காதலித்த மாமனார்… மகனின் பைக்கையும் விட்டுவைக்கவில்லை!

Rajasthan Bizarre Love: காதலில் விழுவது மிக அழகான உணர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் நபரிடம், நீங்கள் காதலில் விழுந்தால் என்ன செய்வது? வினோதமானது தானே! ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது மகனின் மனைவியுடன் காதலித்துள்ளார். இந்த காதலால், அந்த நபரின் பேத்தியை (மகனின் மகள்) விட்டுவிட்டு இருவரும் ஓடிவிட்டனர்.

ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிலோர் கிராமத்தில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பவன் வைரகி சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த புகாரில், தனது தந்தை ரமேஷ் வைரகி, தன் மனைவியுடன் ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தை தனது மனைவியை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் நிரபராதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அந்த பெண்ணுடன் பவனுக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. கூடுதலாக, பவன் தனது தந்தை சில சட்டவிரோத வேலைகளில் இருப்பதாக கூறினார். தான் வேலை காரணமாக கிராமத்தை விட்டு ஒதுங்கி இருப்பதாக கூறினார். மகனின் மனைவியைத் திருடியது மட்டுமின்றி, அவரின் இருசக்கர வாகனத்தையும் அவரது தந்தை திருடிச்சென்றுள்ளார். 

இதற்கிடையில், போலீசார் தனது வழக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பவன் குற்றம் சாட்டினார். பவனின் குற்றச்சாட்டு குறித்து சதார் நிலைய அதிகாரி அரவிந்த் பரத்வாஜ் கூறுகையில், இந்த வழக்கை விடாமுயற்சியுடன் கவனித்து விசாரித்து வருவதாகக் கூறினார். திருடப்பட்ட இரு சக்கர வாகனத்துடன் தப்பி ஓடிய தம்பதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தம்பதியின் இருப்பிடம் குறித்த எந்த விவரங்களையும் போலீசார் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சம்பவம் ஜீரணிக்க கடினமாக இருந்தாலும், இதுபோன்ற வழக்குகள் நடைபெறுகின்றன. ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில், 40 வயது மாமியார் தனது மருமகனை காதலித்தார். மாமனாரை போதையில் தள்ளிவிட்டு இருவரும் ஓடிவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.