ஹாசன் : திருமணத்துக்காக பியூட்டி பார்லரில் ‘மேக்கப்’ செய்து கொண்ட இளம்பெணின் முகம் கோரமாக மாறியதால் திருமணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
பொதுவாக திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் தங்களின் அழகை அதிகரிக்கும் நோக்கில் பியூட்டி பார்லருக்கு செல்வது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் இதுவே அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
ஹாசன் அரசிகெரேவில் வசிக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர் இங்குள்ள பியூட்டி பார்லரில் ‘மேக்கப்’ செய்து கொள்ள சென்றார்.’பியூட்டிஷியன்’ கங்கா எங்களிடம் புது விதமான ‘ஸ்டீம் மேக்கப்’ வந்துள்ளது என கூறினார். இளம்பெண்ணும் அதற்கு சம்மதித்து ‘மேக்கப்’ செய்து கொண்டார்.
இந்த மேக்கப்பால் இளம்பெண்ணின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கண்கள் உள்ளே சென்றுள்ளது; முகம் வீங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன், பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்.
திருமணத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர்.தற்போது இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பியூட்டிஷியன் கங்காவிடம் அரசிகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement