வட மாநிலத்தவர்கள் பிரச்சினை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தமிழக மக்கள் வட மாநிலத்தவர்களை தாக்குவதாக பரவும் வீடியோ போலியானது.. யாரும் நம்ப வேண்டாம்… வட மாநில தொழிலாளர்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதற்கு எதிரிவினையாற்றியுள்ள அண்ணாமலை தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பகிரங்கமாக சவால் விடுதிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
அண்ணாமலை ட்வீட்;
வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!
என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், அந்த ட்வீட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வட மாநிலத்தவர்களை குறித்து பிரச்சாரத்தில் பேசியிருக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில், இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டுக்குள் அனுப்பி வைத்து அதன் மூலம் பாஜகவை வளர்த்துவிடலாம் என்று நினைக்கின்றனர். அதற்கு பழனிசாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம் ஆனால் திமுகவும், தமிழக மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார். அது, வட மாநிலத்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் என்ற வகையில் அண்ணாமலை ஷேர் செய்துள்ளார்.