Vaathi collects Rs. 100 crore: தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படம் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அந்த படத்தை தெலுங்கில் சார் என்கிற பெயரில் எடுத்து ரிலீஸ் செய்தனர். இது தான் தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படமாகும். இந்நிலையில் வாத்தி படம் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
Dhanush,Vaathi: வாத்தி தனுஷ் சொன்னது அப்போ புரியல இப்போ தான் புரியுது
ரூ. 100 கோடிவாத்தி, சார் படம் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதையொட்டி வெளியிடப்பட்ட போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். அந்த ட்வீட்டை பார்த்து முதல் ஆளாக கமெண்ட் போட்டதே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தான். வாத்தி படம் ரூ. 100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது. வாத்தி பிளாக்பஸ்டர் என ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி
சார்வாத்தியை விட சார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சார் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் பார்த்த தெலுங்கு ரசிகர்களோ, தனுஷின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டார்கள். இனி நாங்களும் தனுஷ்காரு ரசிகர்கள் என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
பாலகிருஷ்ணாசார் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அதை மனதார பாராட்டியிருக்கிறார். இதையடுத்து தங்கள் படத்தை பாராட்டிய பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். சார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை பார்த்த தமிழ் ரசிகர்கள் தனுஷை பாராட்டுகிறார்கள். மேலும் விஜய்யின் வாரசுடு பட வசூலை சார் படம் அசால்டாக முந்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush, Sir: பத்தே நாளில் விஜய்யின் வாரசுடு வசூலை முந்திய தனுஷின் சார்: இத்தனை கோடியா!
பாலய்யா
திருச்சிற்றம்பலம்முன்னதாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதையடுத்து தற்போது வாத்தி படம் ரூ. 100 கோடியை தாண்டிருக்கிறது. வாத்திக்கு முன்பாக தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
கேப்டன் மில்லர்நானே வருவேன் படம் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருந்தார்கள் தனுஷ் ரசிகர்கள். தற்போது வாத்தி, சார் பட வசூல் விபரங்கள் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. வாத்தியை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.