செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார் சோனியா அகர்வால். செல்வராகவனின் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார்.
சோனியாவுக்கும், செல்வராகவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருணமான இரண்டே ஆண்டுகளில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி பெற்றனர்.
சோனியா அகர்வாலை பிரிந்த பிறகு கீதாஞ்சலியை 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். அவர்களுக்கு லீலாவதி என்கிற மகளும், ஓம்கார், ரிஷிகேஷ் என்கிற மகன்களும் இருக்கிறார்கள்.
இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமான செல்வராகவன் தற்போது நடிகராக அசத்தி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சோனியா அகர்வாலை பிரிந்தபோது தம்பி தனுஷ் தன்னிடம் சொன்னது பற்றி செல்வராகவன் கூறியது குறித்து பேசப்படுகிறது.
தனுஷ் பற்றி செல்வராகவன் பேட்டி ஒன்றில் கூறியதாவது,
சோனியா அகர்வாலுக்கும், எனக்கும் விவாரத்தான போது தனுஷ் என்னிடம் வந்து, இது கடவுள் உனக்கு கொடுத்த நல்ல வாய்ப்பு. இனிமேல் சிங்கிளாகவே இரு என்றார்.
ஆனால் கீதாஞ்சலி என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என நம்பினேன். ஒருவரை உண்மையாக நேசித்தால், நன்றாக இருப்பார்கள். அது தான் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்றார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவர் இன்னும் சிங்கிளாகத் தான் இருக்கிறார். செல்வராகவனை போன்றே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார் சோனியா அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
கெரியரை பொறுத்தவரை தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வெளியிட்டார் செல்வராகவன். ஆனால் அந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்தியிருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
இதையடுத்து மோகன் ஜி. இயக்கத்தில் செல்வராகவன் நடித்த பகாசூரன் படம் பிப்ரவரி 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அதே நாளில் தான் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்த வாத்தி படமும் ரிலீஸானது.
Dhanush: தனுஷுக்கு மீண்டும் நடந்த நல்ல காரியம்: குவியும் வாழ்த்து
பகாசூரனை வாத்தி ஓவர்டேக் செய்துவிட்டது. வாத்தி படம் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாத்தி படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் ரிலீஸாகி அக்கட தேசத்து ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
அண்ணனின் பகாசூரனும், தம்பியின் வாத்தியும் ஒரே நாளில் வருகிறதே. இப்படி அண்ணன், தம்பியை மோதவிட்டு பார்க்கிறார்களே என முன்பு பேச்சு கிளம்பியது. கெரியர் என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன, தம்பி என்ன, எல்லாம் ஒன்னு தான். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.