மதுரை: களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்படி, மதுரையில் இன்று 2வது நாளாக முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை உள்பட 5 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட மக்கள் நலத்திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பொது மக்களின் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக, மதுரை அரசு ஆய்வு மாளிகையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் […]