சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத 286 அரசு பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இமாச்சல பிரதேசகல்வி அமைச்சர் ரோஹித் தாக்குர் சிம்லாவில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது.
மாநிலத்தில் மொத்தம் 15,313 அரசு பள்ளிகள் உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.3 ஆயிரம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. 455 பள்ளிகள் பதிலாள் (டெபுடேஷன்) ஆசிரியர்கள் மூலம் இயங்குகின்றன.
தொடக்கப் பள்ளிகளில் 10 நடுநிலைப் பள்ளிகளில் 15, உயர்நிலைப் பள்ளிகளில் 20, மேல்நிலைப் பள்ளிகளில் 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவது என அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, 286 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்படும். அவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள், பற்றாக்குறை உள்ளமற்ற பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள். முந்தைய பாஜக அரசுஆசிரியர் நியமனத்தில் உரியநடைமுறை பின்பற்றவில்லை. எனவே, இதை முறைப்படுத்த ஏதுவாக இடமாற்ற கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.